கோவை : கோவை மத்திய சிறைசாலையில் மூலிகைத் தோட்டம் மற்றும் முயல்கள் விற்பனையை சிறைத்துறை காவல் துணை தலைவர் (டிஐஜி) திரு.சண்முகசுந்தரம் இன்று துவக்கி வைத்தார்.
கோவை காட்டூர் பகுதியில் மத்திய சிறைதுறைக்கு சொந்தமான வளாகம் உள்ளது. இந்த சிறை வளாகத்தில் அரை ஏக்கர் பரப்பளவிற்கு மூலிகைத் தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கற்றாழை உள்ளிட்ட 40 வகையான மூலிகைகளை இந்த அரை ஏக்கர் பரப்பளவில் கைதிகள் பராமரித்து வளர்க்க உள்ளனர். இதன்மூலம் மருந்துகள் தயாரிக்கப்படும் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் சிறையில் வளர்க்கப்படும் முயல்கள் விற்பனை இன்று துவங்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு முயல் ரூ.500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காடை முட்டையும் விற்பனை செய்யப்படுகிறது. சிறைத்துறை நிர்வாகத்தின் இந்த முயற்சி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்