தூத்துக்குடி: சென்னை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திலிருந்து உரிய பாதுகாப்புடன் சீல் வைத்துக் கொண்டு வரப்பட்ட இரண்டாம் நிலை காவலர் சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு படையினருக்கான எழுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் அடங்கிய பெட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பார்வையிட்டு, அவற்றை பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைத்து ஆயுதம் ஏந்திய போலீசாரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2022ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு படையினருக்காக எழுத்து தேர்வு நாளை (27.11.2022) அறிவித்துள்ளது. அதன்படி மேற்படி தேர்வுக்கான வினாத்தாள்கள் பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட பெட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு, அவற்றை பாதுகாப்பாக தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாக அறையில் வைத்து, அந்த அறைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு ஒரு தலைமைக் காவலர் தலைமையில் 4 ஆயுதம் ஏந்திய போலீசார் அடங்கிய படையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சம்பத், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து உட்பட காவல்துறை அதிகாரிகள் மாவட்ட காவல் துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் திரு. குமார், திரு. சிவஞானமூர்த்தி, அலுவலக கண்காணிப்பாளர் திரு. மாரியப்பன் உட்பட அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.