தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கோயில் வளாகத்தில் சிறு வியாபாரத்தில் ஈடுப்பட்ட வந்த பல குடும்பங்கள் வருமானம் இன்றி தவித்து வந்த நிலையில், டீ, ஐஸ், வடை, சுண்டல், பூ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து கோயில் வளாகத்தில் வியாபாரத்தை இழந்து வருமானமின்றி தவிக்கும் 75 குடுபங்களுக்கு திருச்செந்தூர் போலீஸ் தரப்பில் தலா 5 கிலோ அரிசி, 18 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
திருச்செந்தூர் ஜீவாநகரில் நடந்த நிகழ்ச்சியில் DSP திரு.பாரத் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோயில் இன்ஸ்பெக்டர் திரு. ரஞ்சித்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் திரு.முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி