சேலம் : சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் மொத்தம் 41 – பாய்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. இதில் 890 – சிறுவர்களும் 483- சிறுமிகளும் மொத்தம் 1373 – சிறுவர் சிறுமியர்கள் உள்ளனர் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக திருமதி.ராஜேஸ்வரி பொறுப்பேற்ற பிறகும் மேற்படி பாய்ஸ் கிளப் களுக்கு புத்துயிர் அளித்து பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறார். முன்னதாக சிறுவர் சிறுமியர்களுக்கு பல்வேறு தலைப்புகள் கட்டுரை போட்டிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமாக கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. தற்போது மேற்படி சிறுவர் சிறுமியர்களின் உடல்நலத்தை பேணும் வண்ணம் அவர்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக தோல் சிகிச்சை முகாம்களை அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது (4.5.2023), கிருஷ்ணகிரி மாவட்டம், தேனி கோட்டை, மற்றும் தர்மபுரி மாவட்டம், மதிகோன்பாளையம் காவல் நிலைய எல்லையில் உள்ள மூக்கனூர் கிராமமாக இடங்களில் சிறுவர் சிறுமிகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் தோல் சிகிச்சை முகாம்களை நடத்தி தேவையானவர்களுக்கு போதுமான மருந்து மற்றும் மாத்திரைகள் கொடுக்கப்பட்டது. அடுத்த அடுத்ததாக தேவையான மருத்துவ சிகிச்சை முகமது நடத்தி சிறுவர் சிறுமிகளின் உடல் நலம் தாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்