திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கோவிலூர், குஜிலியம்பாறை, பளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருக்கும் நண்பர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் உதவும் கரங்கள் என்ற தன்னார்வல அமைப்பின் சார்பில் இன்று வெள்ளியணை ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளையிலிருக்கும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமியர்களுக்கு மதிய உணவு மற்றும் உணவு பொருட்கள், பழங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு உதவும் கரங்கள் அமைப்பை சேர்ந்த கோவிலூர் மீனாட்சி ஜூவல்லரி செல்வம் அரிசி மளிகை பொருள்கள் மற்றும் பழங்களையும், தி.கூடலூர் ஸ்ரீ பூவாளம்மன் வெஜிடபிள்ஸ் அண்டு மளிகை உரிமையாளர் பாலசுப்பிரமணி தேவையான காய்கறிகளையும் வழங்கினர்.
இவற்றை எரியோடு காவல் ஆய்வாளர் சத்யபிரபா தலைமையேற்று உணவு மற்றும் உணவு பொருட்கள் மற்றும் பழங்களை அறக்கட்டளை நிர்வாகி ஜெயராமன் வசம் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணன், வினோத், டீ ஸ்டால் சுப்பிரமணி, மற்றும் செல்வி. கவின் மித்ரா ஆகியோர் தனிமனித இடைவெளியுடனும், முக கவசம் அணிந்தும் பங்கேற்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா