திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் கண்டிகை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பு படிக்கும் மாணவன் ஹேம்நாத் உலக பொதுமறையான திருக்குறளில் உள்ள 1330 குறளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களிடம் ஒப்புவித்தார். சிறுவனின் திறமையை கண்டு வியந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறுவனை ஊக்குவிக்கும் வகையில் பரிசினை வழங்கி வாழ்வில் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.