சேலம் : சேலம் ஆத்தூர் உட்கோட்டம் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியை சேர்ந்த பாலு என்கின்ற பாலகிருஷ்ணன் (27), எம்ஜிஆர் நகர் 5வது வார்டு கீழ் பட்டி என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படித்து வந்த (14) வயது சிறுவனை சிறுவனின் தந்தை மணிகண்டன் ரேடியோ கேட்டதாகவும் அதை கொடுத்து அனுப்புவதாக கூறி குற்றவாளி ஆனவர் சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பாக ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸ்சோ ஆக்டிங்படி திருமதி. கற்பகம் காவல் ஆய்வாளர் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அவர்களால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும் இவ்வழக்கில் விரைவாகக் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணை முடிவில் குற்றவாளி பாலகிருஷ்ணன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக (30/3/ 2023), ஆம் தேதி சேலம் போக சொன்ன நீதிமன்ற நீதிபதி திருமதி.ஜெயந்தி அவர்களால் 5 ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளியை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் திருமதி.சுதா அவர்கள் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்தார். தற்போதைய விசாரணை அதிகாரியான திரு.தமிழரசி ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அவர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சிவகுமார் அவர்கள் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்