திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வேடுபரி வைபவ பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்ட திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.லோகநாதன்,IPS சிறுவனை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தாயார் சன்னதி அருகில் காவலர் போன்ற உடையில் கூட்டத்திலிருந்து ஓடி வந்த சிறுவனைக் கண்டு நிறுத்தி பேசியுள்ளனர். அப்போது அச்சிறுவன் ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினம் பவன் மற்றும் சிராவானி ஆகியோரின் மகன் என்றும், தனக்கு நான்கு வயது ஆவதாக அச்சிறுவன் தெரிவித்துள்ளார் மேலும் “தான் போலீஸ் வேலையில் ஆர்வம் கொண்டதால் போலீஸ் உடை அணிந்து உள்ளதாக தெரிவித்தார். உடனே அச்சிறுவனைத் தூக்கி நன்றாக படித்து நல்லொழுக்கத்துடனும் அறிவாற்றலுடனும் பட்டங்கள் பல பெற்று வாழ்வில் வெற்றி பெறவும், ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு நிறைவேற வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.M. சிவசங்கர்