சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பனிப்புலான்வயல் சாலையில் ராமு (5). என்ற சிறுவன் நடந்து சென்ற பொழுது கீழே ஒரு பை கிடந்துள்ளது. அதை எடுத்து தன் தாயிடம் கொடுத்துள்ளான். சிறுவனின் தாய் சரண்யா தேவகோட்டை நகர காவல் துறையிடம் ஒப்படைத்தார். காவல்துறையினர் அந்தப் பையை பார்த்த பொழுது உள்ளே 2000 ரூபாய் பணமும், ஆவணங்கள் இருந்துள்ளது. அதில் இருந்த போன் நம்பருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த சிங்கம்மாள் தன்னுடைய பை என்று அடையாளம் கூறியுள்ளார். உரியவரிடம் பை ஒப்படைக்கப்பட்டது. இந்த செயலை செய்த சிறுவனை காவல்துறையும், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிங்கம்மாளும் பாராட்டினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி