ராமநாதபுரம்: ராமநாதபுரம்மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தலைவனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வம், 27. இவர் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் ஜூன் 27ல் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் திரு.ஜெயந்தி வழக்கு பதிந்து விசாரித்து வந்தார். இந்நிலையில் சிறுமியை, மதுரையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் விட்டுச் சென்றது தெரிய வந்தது.
இதன்படி சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியை கடத்திய செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.