தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி வெளியே சென்று வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளைப் பல்வேறு இடங்களில் தேடி கண்டுபிடிக்க முடியாமல் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஏரியூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ்கண்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து போலிசாருடன் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி தவமணி 29. என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது இதையடுத்து தலைமாறாக இருந்த தவமணியை பிடித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் சிறுமையை கடத்திச் சென்று குழந்தை திருமண செய்து கொண்டதும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தவமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது மேலும் காவல் துறை விசாரணை அதிகாரிகளால் சாட்சி, ஆதாரங்களை முன்வைக்கப்பட்டு இந்த வழக்கின் விசாரணை முடிவில் தவமணி மீதான குற்றச்சாட்டு உறுதியாகி தவமணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி திரு.சிவஞானம் அவர்கள் தீர்ப்பளித்தார்.