திருவள்ளூர்: சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் திருவள்ளூர் சேர்ந்த விக்டர் பிடிபட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த செல்வம், கிருபாகரன், ராஜேந்திரன், பியூலா உள்ளிட்டோரும் கைதாகினர். குற்றவாளி தரப்பில் ஜாமீன் கோரி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயதுக்கு கீழ் இருந்ததை காவல்துறை நிரூபிக்கத் தவறிவிட்டதாக தெரிவித்த நீதிபதி அனைவரையும் விடுதலை செய்தார்.
சிறுமியை வன்கொடுமை செய்தவரை நீதிமன்றம் விடுதலை செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, திருவள்ளூர் நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்துவிட்டார். மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய விக்டர் ஜானுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 2 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதில், 1.75 லட்சம் ரூபாயை சிறுமியின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.