கோவை: கோவை மாவட்டம் ஆழியார் காவல்* நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு ஆழியார் காவல்ஆய்வாளர் திரு. சுப்பிரமணியன் அவர்கள் விக்னேஷ் 20.என்பவர் மீதுவழக்குப்பதிவு செய்தார்.
இவ்வழக்கு கோவை மாவட்டம், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவுபெற்று நேற்று (28.02.2022) குற்றவாளி விக்னேஷ்-க்கு 5வருடம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 20,000/-அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலரை கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்