கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த மொஹைதீன் 28. என்பவரை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அன்னம் அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
குழந்தை திருமணம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவித்திட 181, 1098 என்ற எண்ணிலும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்