சென்னை: வண்ணாரப்பேட்டை: கொருக்குப்பேட்டை பகுதியில் வசிக்கும் சிறுமி 15.4.2021 அன்று முதல் காணவில்லையென அவரது தாய் H6 ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது சிறுமி காணவில்லை (Girl Missing) பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை 8மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் சிறுமியை காதலிப்பதாக கூறி ஒரு வாலிபர் அழைத்துச் சென்றது தெரியவந்தது
.H6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், ஞானவேல், வ/19, என்பவர்
மேற்படி சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி செய்யூருக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக தாலி கட்டி, பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்ததின்
பேரில், இவ்வழக்கு W13 வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு போக்சோ சட்டப்பிரிவுகளில்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளியை தேடிவந்தனர். இந்நிலையில் W13 வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கண்ணன் ரவுண்டானா அருகே வாகன தணிக்கையில் இருசக்கர வாகனத்தில் கத்தியுடன் வந்த ஞானவேல், வ/19, செங்கல்பட்டு என்பவரை 30.5.2021 அன்று கைது செய்தனர்.
விசாரணையில் ஞானவேல் மேற்படி சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.