கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக சிறுமியின் அம்மா கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப் பதிந்து காவல் ஆய்வாளர் திருமதி.சுமித்ரா அவர்கள் குற்றவாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.