கோவை: கோவை மாவட்டம்,ஆனைமலை பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டார்.
இப் புலன் விசாரணையில் அச்சிறுமியை அவரது உறவினர் தேவராஜ் என்பவரின் மகனான தாமரைச்செல்வன் 22. திருமணம் செய்தது தெரியவந்தது. எனவே, மேற்படி நபரை ஆனைமலை காவல் நிலைய காவல் துறையினர் போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
குழந்தைத் திருமணம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தெரிவித்திட 181,1098 மற்றும் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212, 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்