தென்காசி : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை,அதே பகுதியை சேர்ந்த 21 வயது நபர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை பேசி தனது வீட்டிற்கு அழைத்து சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார்.இது தொடர்பாக அந்த சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திருமதி. சித்திரகலா அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.