திண்டுக்கல்: 04.03.2020 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(30) என்பவர் காதலித்து திருமணம் செய்வதாக கூறி பலமுறை தனியாக இருந்துள்ளனர். தற்போது அந்த சிறுமி மூன்று மாத கர்ப்பம் அடைந்ததை அறிந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரை தொடர்ந்து வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பேபி அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த கார்த்திகை POCSO Act இன் படி வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா