தர்மபுரி: கடந்த 2017 ஆம் ஆண்டு அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த (17). வயது சிறுமி வீட்டிலிருந்து மாயமானார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி.லட்சுமி அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் துரைசாமி (22). என்பவர் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்தது. மேற்கொண்டு இது தொடர்பாக போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த துறையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கின் இறுதி விசாரணையில் மேற்கண்ட நபரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி திரு.சிவஞானம் அவர்கள் தீர்ப்பளித்தார்.