சென்னை: அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த சிறுமியின் தாய் இறந்துவிட்டதால், அச்சிறுமியின் தாத்தா, பாட்டி சிறுமியை வளர்த்து வந்தனர். இந்நிலையில், 24.12.2020 அன்று “சிறுமி காணவில்லை” என சிறுமியின் பெரியம்மா K3 அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
. K3 அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, தேடுதலில் ஈடுபட்டு, காணாமல் போன சிறுமியை கடந்த 25.3.2021 அன்று கண்டுபிடித்து மீட்டு விசாரணை செய்தனர்.
விசாரணையில், சிறுமியை அவரது மாமா செல்வகுமார், வ/26, என்பவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாக தெரிவித்தார்.பின்னர் மீட்கப்பட்ட சிறுமி குழந்தைகள் நல அமைப்பு வாரியம் மூலம் குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.
மேலும் மேற்படி வழக்கானது, W7 அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு (AWPS) மாற்றம் செய்யப்பட்டு, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. W7 அண்ணாநகர் AWPS காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்த செல்வகுமார், (வ/26) வில்லிவாக்கம் என்பவரை கைது செய்தனர்.மேலும் குற்ற எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.