திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, தேவநல்லூர் கீழுர் பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற மணி என்பவரின் மகன் மணிகண்டன் (26), என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பிரேமா அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், (29.07.2022) குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.