சென்னை: சென்னைஅடையாறு காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 15 வயது சிறுமியை அவருக்கு தெரிந்த கோகுல்ராஜ் என்ற நபர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாகவும், தற்போது மீண்டும் பாலியல் உறவு கொள்ள மிரட்டுவதாகவும், சிறுமியின் தாயார் W-19 அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
W-19 அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி குற்றவாளி கோகுல்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், கோகுல்ராஜ் மேற்படி 15 வயது சிறுமியிடம் Instagram சமூக வலைதளத்தில் அறிமுகமாகி, காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்த நிலையில், வீட்டில் யாருமில்லாத சமயத்தில் சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதும், மீண்டும் கோகுல்ராஜ் சிறுமியிடம் பாலியல் உறவு கொள்ள அழைத்தபோது சிறுமி மறுத்ததும், மறுத்தால், நாம் இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை உனது பெற்றோருக்கு அனுப்பி வைத்திடுவேன் என மிரட்டியதும் தெரியவந்தது.
அதன்பேரில் W-19 அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளி கோகுல்ராஜ் 22. அடையாறு என்பவரை கைது செய்தனர். மேற்படி குற்றவாளிமீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்