இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த 14.06.2020-ம் தேதி 4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்திய கீழக்கரையைச் சேர்ந்த சேகு சாதிக் என்பவரின் மகன் காஜா முகமது மீது கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் u/s 366, 376 (AB) IPC & 5(M) r/w 6 OF POCSO ACT 2012-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது.
இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று (23.02.2022) மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.சுபத்ரா அவர்கள் குற்றவாளியான காஜா முகமதுவிற்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,10,000 பணம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள்.