இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பூப்பாண்டியபுரத்தை சோ்ந்த செபஸ்தியான் மகன் கோட்டை சவரிமுத்து என்பவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண்: Cr.No: 02/21 U/S: 5(L)(n), r/w 6,9(L)(n), r/w 10 of POCSO Act 2021 and 506(ii) IPC.-ன் கீழ் கைது செய்யப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மேற்படி நபர் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்கள்.
இதன்படி கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராதா அவர்கள் இன்று 23.07.2021ம் தேதி மேற்படி சவரிமுத்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்கள்.