தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் உட்கோட்டம் எரியூரை சேர்ந்தவர் முருகசேன் 47. கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 2022 டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் முருகசேனை கைது செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் முருகசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25,000/- ரூபாய் அபராதம் விதித்து தருமபுரி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது