சேலம் : சேலம் மேச்சேரி காவல் நிலைய சரகம் கல் கோட்டை அரங்கனூர் மேச்சேரி பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (27 ),என்பவர் கடந்த (27/ 7/ 2018), ஆம் தேதி கல்கோட்டை அரங்கனூர் மேச்சேரி பகுதியை சேர்ந்த (14), வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக மேச்சேரி காவல் நிலையத்தில் சட்டப்பிரிவு 363. 366. 366 போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் சிறுமியை கடத்த உதவியாக இருந்த அவரது உறவினர் தங்கவேல் (71) சீலநாயக்கனூர், காட்டுவளவு, பாணாபுரம் மேச்சேரி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து சேலம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் திருமதி.சுதா அவர்கள் சிறப்பாக வாதாடி சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் சுந்தர்ராஜ் (27), மற்றும் தங்கவேல் (71), ஆகியோரின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் மற்றும் கடத்தலுக்கு உதவி இருந்த குற்றத்திற்காக இன்று நீதிபதி அவர்களால் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் குற்றவாளிகளுக்கு அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்