மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை மாவட்டத்தில் குறைந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உட்கோட்டம், எழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய எழுமலை பேருந்து நிலைய நிழல்குடை அருகே உள்ள லாரி நிறுத்தத்தின் அருகே மறைவான இடத்தில் எழுமலையைச் சேர்ந்த ராஜா,(42) (வழக்கறிஞர்) என்பவர் தன் வீட்டின் அருகில் குடியிருக்கும் 8 வயது பெண் குழந்தையை (17.06.2023)-ம் தேதி அன்று மாலை சுமார் 05.30 மணியளவில் பாலியல் தீண்டல் செய்துள்ளார். அங்கு தற்செயலாக இயற்கை உபாதை கழிக்க வந்த ராஜா,(32), த/பெ. கணேசன், முத்தையா நகர், எழுமலை என்பவர் பார்த்து அச்சம்பவத்தை தடுத்து அந்த பெண் குழந்தையை அவரது பெற்றோரிடம் அழைத்துச் சென்று நடந்த விஷயங்களை கூறியுள்ளார்.அதன் பேரில் அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் எழுமலை காவல் நிலையத்தில் குற்றவாளி ராஜா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை துரிதமாக செயல்பட்டு குற்றவாளியிடமிருந்து காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்த செயலுக்காக திரு.ராஜா என்பவரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சிவபிரசாத், இ.கா.ப அவர்கள் அழைத்து சான்றிதழும், நினைவு பரிசையையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்