சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை (17.01.2023) கொடியசைத்து
துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி ப சிதம்பரம் அவர்கள், ராமநாதபுரம் சரக காவல் துறைத்தலைவர் (சிவகங்கை மற்றும ; இராமநாதபுரம்) திரு.துரை,இ.கா.ப. அவர்கள், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வராஜ், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.மாங்குடி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.மணிவண்ணன், திருப்பத்தூர் வட்டாட்சியர் திரு.வெங்கடேசன், சிராவயல் ஜல்லிக்கட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.வேலுச்சாமி, உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன
அவர்கள் பேசுகையில், தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டுக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவைகள் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு, அனைத்துக் கிராமப்புறப் பகுதிகளிலும் வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக, சிவகங்கை மாவட்டம், சிறாவயல் மஞ்சுவிரட்டு என்பது உலக அளவில் புகழ் பெற்றதாக திகழ்ந்து வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை எவ்வித இடையூறுன்றி சிறப்பாக தமிழகத்தில்
நடத்திட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட அனைத்து
நடவடிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாளை
முன்னிட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, சிறாவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டு
நிகழ்ச்சி இன்றையதினம் சிறப்பாக நடைபெறுகிறது. இம் மஞ்சுவிரட்டு விழாவில
பங்கேற்பதற்கென அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு
பல்வேறுப் பகுதிகளிலிருந்து காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இவ்விழாவினை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வரும் சிறாவயல் மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பு குழுவினை சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுகளை
கொள்கிறேன். மேலும், இவ்விழாவில பங்கு பெற்றுள்ளவர்கள் அரசால் வகுக்கப்பட்டுள்ள
அனைத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்புடன் இருந்து விழாவை சிறப்பாக
நடத்திடுவதற்கு ஒவவொருவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என மாண்புமிகு
கூட்டுறவு துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி