சிவகங்கை: தேவகோட்டையில் சிறப்பு ரத்த பரிசோதனை மருத்துவ முகாம். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகர் பஸ் நிலையம் அருகில் துருகமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நம்பிக்கை மையம் நடமாடும் மருத்துவக் குழு மற்றும் மக்களை தேடி மருத்துவக் குழு சார்பாக சிறப்பு ரத்த பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினர். இதில் நடமாடும் மருத்துவர் குழு கல்லூரி செவிலியர் ஜூலியட் மெர்சி லேப் டெக்னீசியன் தனவேல் மக்களை தேடி மருத்துவம் குழு லதா பானு மற்றும் திருமதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் முருகன் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி













