தஞ்சை : தஞ்சை காவல் கண்காணிப்பாளர் திரு.தேஷ்முக்த்,IPS அவர்களின் உத்தரவின்படி, குடந்தை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் ஆலோசனை படி தாழுக்க காவல் நிலைய ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் சிறப்பு படை காவல் உதவி ஆய்வாளர் திரு. கீர்த்திவாசன் மற்றும் குடந்தை தாழுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மோகன் ஆகியோர் தலைமையில் நேற்று (27-11-2020) கும்பகோணம் புறவழிச் சாலை அம்மாபேட்டை ரவுண்டானா அருகில் நடைபெற்ற வாகன தணிக்கை நடைபெற்றது.
அப்போது அவ்வழியாக வந்த TN.18-M.0344 எண் உடைய இண்டிகா காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டார்கள். அதில் எட்டு வெள்ளை நிற சாக்கில் தடை செய்யப் பட்ட (புகையிலை ) Cool Lip filter Tobaco 152 கிலோ இருந்தது அதனை போலீசார் கைப்பற்றி காரில் வந்த பிரகாஷ் 35- மற்றும் பிரசாத் -35 ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து, விசாரித்ததில் அவர்கள் தந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ராஜேஸ்குமார் 32-என்பவரை கைது செய்து கும்பகோணம் அருகிலுள்ள ரெட்டிபாளையம் சாய்பாபா விரிவாக்கம் மேலவெளியிலுள்ள அவரின் வீட்டில் இருந்து 36 மூட்டைகளில் 70 .2- Hans ம் 59-கிலோ Cool Lip – ம் விமல் பாக்கு 14 கிலோவும் மொத்தம் 775 கிலோ காரில் எடுத்து வந்தது. 152 கிலோ ஆக மொத்தம் 927 கிலோவும் மற்றும் விற்பனை பணம் ரூபாய் 70.000 ரெட்மீ செல் போன்கள் ஆகியவைகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்