புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம் வயது (55). இவர் ஆலங்குடி போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையில் பணியில் அமர்த்தப்பட்டு அவர் திருமயம் பகுதியில் கடந்த 15 நாட்களாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் பணி முடிவடைந்து இரவு 10.30 மணி அளவில் சண்முகம் வீட்டிற்கு செல்ல திருமயம் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் பஸ் ஏறும் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை தூக்கி திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சண்முகம் சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களுக்கு மனைவி இரண்டு மகள்களும் உள்ளனர். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி