திருவாரூர்: தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து, தமிழ்நாடு காவலர் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2023-2024 ஆண்டிற்கான தமிழ்நாடு காவலர் சிறப்பு கல்வி உதவித்தொகை ரூ.1,95,756/- க்கான காசோலையை 7 நபர்களுக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (09.09.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் வழங்கி, வாழ்த்து கூறினார்கள்.