புதுக்கோட்டை : புதுக்கோட்டை அன்னவாசல் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட சிறப்புப்படை போலீசார் அன்னவாசல் கடைவீதி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அன்னவாசல் பகுதியை சேர்ந்த மீனாம்பாள் (60), ஜானகிராமன், சந்திரசேகரன் ஆகிய 3 பேர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 27 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.