சிவகங்கை : தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில், பணியாற்றிய நண்பர்கள் ஒன்று கூடுகை விழாவில் அவர்கள் பயிற்சி பெற்ற மைதானத்திற்கு வந்து அனைவரும் பழைய நினைவுகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளும் ஒரு செயலாக அனைவரும் கவாத்து செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காணொளி இது. உண்மையில் அவர்களுக்கு வாழ்வளித்து உயர்த்திய பணியின் மீது அவர்கள் கொண்டிருக்கும் பக்தியை நினைத்து நான் உள்ளபடியே மனம் நெகிழ்கிறேன். பணி மீது கொண்ட பக்திக்கு இது சரியான சான்று.
மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். அனைத்திலும் சிறந்த விஷயம் என்னவென்றால் கவாத்து செய்யும் Squad இல் AC, OC மற்றும் பிற பணித்தரம் கொண்ட அனைவருமே உயர் பதவி தகுதி தரம் என்று எவ்வித பாகுபாடும் இன்றி ஒன்றாக கவாத்து செய்த விதம் அவர்களின் மனம் ஒரு இமயம் என்பதை உணர்த்துகிறது. இனிவரும் நாட்களில் இது நமக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்