தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிந்துவரும் தலைமையிட தர்மபுரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N.பாலசுப்பிரமணியன் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.P.சொக்கலிங்கம் மற்றும் திரு.N.நாகராஜன் ஆகியோரின் சிறப்பான பணியை பாராட்டி 2020 -2021 ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் Ati-Utkrisht Seva Padak/Utkrisht Seva Padak என்ற பதக்கம் பெற தேர்வாகி இருந்தனர். அவர்களுக்கு (24.02.2025) காலை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,B.com.BL., அவர்களால் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.