தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் முதலிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி(60). இவர் கடந்த 25.01.2019 அன்று முதலிப்பட்டி காட்டுப்பகுதியில் பள்ளி சென்று வந்த மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்து, சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாண்டியை POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
06.11.2019 அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. குமார் சரவணன் எதிரி பாண்டிக்கு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டனையும், கடத்திச் சென்றதற்காக 10 ஆண்டு சிறை மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக 7 ஆண்டு சிறையும், ரூபாய் 3000/- ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டணை பெற்று தந்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. நாகலட்சுமி அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்.