தேனி : தேனி ஜெயமங்கலம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட குள்ளப்புரம் பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு கார்த்திக் (28) என்பவர் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 26.11.2019-ம் தேதி தேனி மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிவில் நீதிபதி திருமதி.கீதா, ML., அவர்கள் கார்த்திக்கை குற்றவாளி எனக் கூறி 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹7,000/- அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறி தீர்ப்பளித்தார்.
மேலும் இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், நீதிமன்ற காவலர் மற்றும் அரசு வழக்குரைஞர் ஆகியோர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரன் தேஜஸ்வி, IPS., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.