சேலம் : (05.12.2023) ஆம் தேதி சேலம் மாநகர காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக்கூடத்தில், தமிழ்நாடு காவல்துறையில் நடைபெற்ற திறனாய்வு போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் பெற்றவர்கள், அவர்களுக்கு பயிற்சி அளித்தவர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், சேலம் மாநகரத்தில் வெடிமருந்து பொருட்கள் கடத்தலை கண்டுபிடித்தவர்களுக்கும், போக்சோ வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக பணியாற்றியவர் என காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவருக்கும் சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.பா.விஜயகுமாரி.இ.கா.ப அவர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்கள்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஆர். மோகன் குமார்