தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
கடந்த 28.09.2020 அன்று நாலாட்டின்புதூர் காவல் நிலையம் மற்றும் கயத்தார் காவல் நிலைய செயின்பறிப்பு வழக்குகளில் சம்மந்தப்பட்ட, எதிரிகளான மதுரை மவாட்ட கீழவளைவு கிராமத்தை சேர்ந்த அய்யனார் மற்றும் சூரியா ஆகியோர்களை சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் கைது செய்து வழக்கில் சம்மந்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற உதவியாக இருந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் திருமதி. சுகாதேவி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிலுவை ஆந்தோணி, கோவில்பட்டி கிழக்கு (குற்றம்) காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. முருகன் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் திரு. ஸ்ரீராம், ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 22.09.2020 புதியம்புத்தூர் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியான மாயக்கிருஷ்ணன் என்பவரை கைது செய்ய உதவியாக இருந்த தட்டப்பாறை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. விக்னேஷ் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்டப்பட்ட, பகுதியில் ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன சுமார் 50 வயது மதிக்கதக்க பெண்ணை கண்டுபிடித்து, சென்னையில் இருந்தவரை அழைத்துவந்து அவருடைய குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ், பெண் தலைமைக் காவலர் திருமதி. அலாய்ஷியஸ் ரோசாரி மேக்ஸினா மற்றும் காவலர் ஆறுமுக நயினார் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 25.09.2020 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கின் எதிரியை அடையாளம் கண்டு கைது செய்து, வழக்கின் சொத்தான 7¾ சவரன் தங்க சங்கிலியை கைப்பற்ற உதவியாக இருந்த புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்து கணேஷ், தலைமைக் காவலர் திரு. கருப்பசாமி துரை, முதல் நிலை காவலர் திரு. ராம்பாபு மற்றும் காவலர் திரு. ஜான்சன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காவும்,
கடந்த 16.05.2020 அன்று ஏரல் காவல் நிலைய கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை அடையாளம் கண்டு கைது செய்து வழக்கின் சொத்தான 13 பவுன் தங்க நகைகளை கைப்பற்ற உதவியாக இருந்த ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ஜேம்ஸ் வில்லியம்ஸ் மற்றும் காவலர் திரு. செந்தில் குமார் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 12.09.2020 அன்று சாத்தான்குளம் காவல் நிலைய கொள்ளை வழக்கின் எதிரியான கார்த்தீசன் என்பவரை அடையாளம் கண்டு கைது செய்ய உதவியாக இருந்த சாத்தான்குளம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் திரு. சபாபதி என்பவரின் மெச்ச தகுந்த பணிக்காவும்,
காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப, தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன் ஆகியோர் உடனிருந்தார்.