திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை தென்மண்டல ஐஜி முருகன் பாராட்டினார். அம்மையநாயக்கனூர் அருகே பாலூர் டேம் செல்லும் வழியில் சந்தேகத்தின் அடிப்படையில் காரில் வந்தவர்களை, ரோந்து பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது நாமக்கல்லில் இருந்து பொன்னுசாமி என்பவர் காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட ஈரோடு மணிகண்டன், ஜீவா ,சரவணன், கவின்குமார், அரவிந்த்தை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மற்றும் கடத்தல் நபரை நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பணியும் போது துரிதமாக செயல்பட்ட சிறப்பு எஸ்.ஐ. கருப்பையா, போலீசார்கள் பெருமாள், சத்யராஜ், அழகு முருகன் ஆகியோரை தென்மண்டல ஐஜி முருகன், டி.ஐ.ஜி.முத்துசாமி,எஸ்.பி.ரவளிபிரியா ஆகியோர் பாராட்டினர்.