விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில், நீதிமன்ற பணிகளை விரைந்து முடித்து சிறப்பாக பணியாற்றிய காரியாபட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் திரு. சிவபாலனை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா, பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
உடன், அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. கரூன் காரத் உத்தராவ், விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்
காணிப்பாளர்கள் திரு. அசோகன், திரு.சூரியமூர்த்தி ஆகியோர் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி