திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் கொலை கொள்ளை ரவுடிசம் பான் மசாலா குட்கா விற்பனை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி குற்ற செயல்கள் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு காவல் அலுவலர்களை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி எடையூர் காவல் கரகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5 லட்சம் மதிப்புள்ள 546 கிலோ புகையிலை குட்கா பான் மசாலா வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை சிறப்பாக செயல்பட்டு பறிமுதல் செய்த எடையூர் காவல் நிலைய தலைமை காவலர் எஸ் கலையரசன் தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் கே மோகன் தாசன் முதல் நிலைக் காவலர் எஸ் சுரேஷ் காவலர் ராஜேஷ் ஆகியோருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டின் அச்சான்றிதழ் வழங்கினார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்