திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc.,(Agri.), அவர்கள் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றபின் மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டவிரோத செயல்கள், கொலை, கொள்ளை, ரௌடிசம், பன்மசாலா, குட்கா விற்பனை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு சிறப்பாக பணியாற்றும் காவல் அலுவலர்களுக்கு பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த அரித்துவராமங்கலம் காவல் சரக வரலாற்றுதாள் குற்றவாளி சடையங்கால் செல்வக்குமார் (எ) செல்வக்குமார் என்பவரை பிடித்து உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டவர்கள்.
1).திரு.P.தமிழ்மாறன், காவல் துணை கண்காணிப்பாளர், நன்னிலம் உட்கோட்டம். 2).திரு.G.ராஜ், காவல் ஆய்வாளர், குடவாசல், காவல் நிலையம், 3).செல்வி,C.சந்தானமேரி, காவல் ஆய்வாளர், வலங்கைமான், காவல் நிலையம், 4).திரு.D.சரவணன், காவல் உதவி ஆய்வாளர், நகர காவல் நிலையம், திருவாரூர், 5).திரு.M.முருகேசன், காவல் உதவி ஆய்வாளர், அரித்துவாரமங்கலம், காவல் நிலையம், 6).திரு.D.கிருஷ்ணகுமார், த.கா.229, மதுவிலக்கு அமல் பிரிவு, திருவாரூர். 7).திரு.R.ஆனந்த், மு.நி.கா.393, தாலுகா காவல் நிலையம், திருவாரூர், .திரு.P.பிரவீன், காவலர்.621, ஆயுதப்படை, 9).திரு.A.சாதாம் உசேன், காவலர்.1671, ஆயுதப்படை, திருவாரூர். அரித்துவாரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடித்து வாகனத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள உதவியாக இருந்த அரித்துவாரமங்கலம் காவல் நிலைய தனிப்பரிவு காவலர். திரு.N.அறிவழகன். தம்பிக்கோட்டை சோதனை சாவடியில் சிறப்பாக பணியாற்றி பாண்டி மது பாட்டில்களை கடத்தி வந்த நபர்களை பிடித்து வாகனத்துடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்த எடையூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வார் திரு.P.மணிமுத்து. தொடர்ச்சியாக இருசக்கர வாகனத் திருட்டு, உண்டியல் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர்களை பிடித்து உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டர்கள்.
கொரடாச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.M.வைரமணி திருத்துறைப்பூண்டி பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட ரௌடி சுஜிலி (எ) சாம்ராஜ் என்பவரை கைது செய்து உரிய சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொண்ட 1).திரு.M.கழனியப்பன், காவல் ஆய்வாளர். திருத்துறைப்பூண்டி, காவல் நிலையம், 2).திரு.A.முத்துக்குமார், காவல் உதவி ஆய்வாளர், திருத்துறைப்பூண்டி, காவல் நிலையம், மற்றும் திருத்துறைப்பூண்டி காவல்நிலைய காவலர்கள் 3).திரு.S.அய்யபன், மு.நி.கா.120, 4).திரு.S.பாலமுருகன், மு.நி.கா.411, 5).திரு.R.சக்திவேல், காவலர் 569, 6).திரு.G.கணபதி,7) திரு.A.ராஜேஷ், மற்றும் ஊர்காவல் படையை சேர்ந்த திரு.M.முத்துமணி ஆகியோர்களை இன்று (27.12.2023) திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc.,(Agri.), அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கினார்கள். திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடடிவக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்கள். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் குறித்து காவல்துறையினருக்கு உடன் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்