சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கம்பர் தெருவில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் கோயம்புத்தூர் வேலைக்கு சென்றவர் காணவில்லை என புகார் கொடுத்திருந்த நிலையில் போலீசார் பல நாள் தேடியும் கிடைக்காத தால் தேடும் பணியை கைவிட்டனர்,
இந்நிலையில் செப்டெம்பர் 9 ஆம் தேதி கம்பர் தெருவில் சீராளன் என்பவர் வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது மனித எலும்புகள் மிதந்தன பின்னர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தொடர் விசாரணைக்கு பின் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியில் வசித்த சுகந்தி என்பவர் தனது கணவர் பாண்டியனை செப்டிக் டேங்கிற்குள் உள்ளே தள்ளி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
மனைவியே கணவனை கொலை செய்த தகவல் தேவகோட்டை நகர் பகுதிகளில் தீயாய் பரவியது. வழக்கு பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் கொலை செய்யப்பட்டவரின் மனைவியை கைது செய்து சிறையில் அடைத்து சிறப்பாக செயல்பட்டதற்காக தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் அன்சாரி உசேன் மற்றும் நமச்சிவாயம் மற்றும் தலைமை நிலையக் காவலர் சிதம்பரம் மற்றும் முதல் நிலைக் காவலர் சாத்தையா மற்றும் காவல்துறையினர்க்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஐ.பி.எஸ் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி