மதுரை : தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் /படைத் தலைவர் அலுவலகம் மதுரை மாவட்டம், பேரையூர் காவல் நிலையத்தில் கடந்த (07.08.2023) அன்று பிறந்த ஆண் குழந்தை காணாமல் போனதால் சந்தையூர் கிராம செவிலியர் திருமதி.காந்திமதி கொடுத்த புகாரின் பேரில் (27.08.2023) அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி பேரையூர் வட்ட காவல் ஆய்வாளர் திருமதி மதனகலா தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது, இந்த தனிப்படை ஈரோடு, விருதுநகர், பெங்களூர் ஆகிய இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு (28.08.2023) அன்று பெங்களூரில் தேஜஸ்வரி வயது (36). என்பவரிடம் குழந்தை இருப்பதை கண்டுபிடித்து 16 நாள் வயதுடைய குழந்தை மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்திலேயே குழந்தையை கண்டுபிடித்து. குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையை சேர்ந்த காவல் ஆய்வாளர் மதனகலா, பேரையூர் வட்ட காவல், சார்பு ஆய்வாளர் ஜெயம்பாண்டியன், பேரையூர் காவல் நிலையம். த.கா.ராஜேஷ்கண்ணா, சேடபட்டி காவல் நிலையம், மு.நி.கா. முத்து மாணிக்கம், பேரையூர் காவல் நிலையம், பெ.மு.நி.கா. குருரத்தினம், பேரையூர் காவல் நிலையம் ஆகியோர்களை காவல்துறை தலைமை இயக்குனர் / படைத்தலைவர் அவர்கள். தலைமையகம் அழைத்து தனிப்படையினருக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.விஜயராஜ்