தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் ஆலை எதிர்ப்பு குழுவினர் கடந்த 12.12.2022 அன்று அணி திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க திட்டமிட்டு இருந்த செயலை வடபாக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் ஆலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளரிடம் நேரடியாக சென்று உண்மை கள நில விவரத்தை விவரித்து அணி திரள்வதை தடுத்து எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் பணிபுரிந்த வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரபி சுஜின் ஜோஸ் மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சேகர் ஆகியேரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 25,000/- அபராதமும் பெற்று தந்த கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மாரியம்மாள், தலைமை காவலர் திருமதி. மயில்கனி மற்றும் காவலர் திருமதி. ஜெபமேரி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த், உதவி ஆய்வாளர் திரு. அரிக்கண்ணன், தலைமை காவலர் திரு. ஆனந்த அமல்ராஜ், காவலர்கள் திரு. சரவணக்குமார் மற்றும் திரு. சிவா ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த குற்றவாளிகளை மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைக்க உதவியாக இருந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. முத்துராஜா, திரு. அஜீஸ், தனிப்பிரிவு முதல் நிலை காவலர்கள் திரு. பாலமுருகன் மற்றும் திரு. மகேந்திரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த ரவுடியை கைது செய்து வழக்குபதிவு செய்ய உதவியாக இருந்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சதீஷ், முதல் நிலை காவலர் திரு. செல்வக்குமார், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. மாரியப்பன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக காரில் கடத்திய வழக்கில் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 440 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட 4 குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு சில மணிநேரத்தில் கைது செய்த ஏரல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. குணசேகரன், சாயர்புரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. கைலயங்கிரிவாசன், ஏரல் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. நாராயணசாமி மற்றும் குரும்பூர் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. சந்தோஷ் செல்வம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தொழில்நுட்ப பிரிவில் சிறப்பாக பணியாற்றிய உதவி ஆய்வாளர் திரு. திருநாவுக்கரசு மற்றும் காவலர் திரு. ஸ்டீபன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 2022ம் ஆண்டு சி.சி.டி.என்.எஸ் ல் குற்ற வழக்கு விவரங்களை கண்டறிதலில் 570 நபர்களுக்கு குற்ற பிண்ணனி விவரங்களை கண்டறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் திருமதி. விஜயலெட்சுமி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு நடந்த பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 3,000/- அபராதமும் பெற்று தந்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திருமதி. சங்கீதா என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய வழக்கின் குற்றவாளிக்கு பிடியாணை பிற்பிக்கப்பட்டு 2 ½ ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்த குற்றவாளியை சென்னை சென்று கைது செய்த வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. ராஜா மற்றும் குளத்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. ஆலோசனை சுரேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
முறப்பநாடு காவல் நிலையத்தில் நீதிமன்றம் மூலம் பெறப்பட்ட வாரண்டுகளில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 73 வாரண்டுகளின் பிடியாணையை நிறைவேற்ற உதவியாக இருந்த முறப்பாநாடு காவல் நிலை முதல் நிலை காவலர்கள் திரு. சரவணக்குமார் மற்றும் திரு. சதீஷ் தணிகை ராஜா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த 2 கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய காவல் ஆய்வாளருக்கு உதவியாக இருந்த சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர்கள் திரு. கலைவாணர் மற்றும் திரு. பொன்பாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவரின் சரியான முகவரியை கண்டுபிடித்து அவர் 2020ம் ஆண்டு இறந்த விபரம் விசாரித்து குற்றவாளியின் இறப்பு சான்றிதழை பெற்று வந்து பிடியாணையை நிறைவேற்றி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை முடிக்க உதவியாக இருந்த கொப்பம்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. ஜெயபிரகாஷ் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் திரு. கனராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2021ம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5,000/- அபராதமும் பெற்று தந்த கழுகுமலை காவல் நிலைய காவலர் திரு. ஜெய்சங்கர் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புலன் விசாரணையில் இருந்த போக்சோ மற்றும் வரதட்சணை வழக்குகளில் கடந்த அக்டோபர் மாதத்தில் 3 வழக்குகளும், நவம்பர் மாதத்தில் 6 வழக்குகளும் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க சிறப்பாக பணிபுரிந்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலை காவலர்கள் திருமதி. விஜயா மற்றும் செல்வி. முத்துலெட்சுமி ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 36 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. லயோலா இக்னேஷியஸ், விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரேயா குப்தா இ.கா.ப மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.