திருச்சி: திருச்சி மாவட்டம் , ஜீயபுரம் காவல் உட்கோட்டம், இராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்த சாலைவிபத்தில் நிலைகுலைந்த முதியவருக்கு உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய காவலர் திரு.பிரபு அவர்களை காவல் உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சாலை விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை உடனடியாகமீட்டு முதலுதவி செய்து மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்றிய 15 நபர்களுக்கும், மேலும் விபத்தில் சிக்கிய நபர்களுக்கு உதவி செய்த காவலர்களுக்கும், மணல் திருட்டில் விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து மணல் திருட்டை தடுத்தமைக்காகவும், திருட்டு வழக்கில் திறம்பட செயல்பட்டு களவுபோன பொருட்களை மீட்டமைக்காகவும், கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் எதிரிகளை கைது செய்ததற்காகவும், மேலும் பல்வேறு வழக்குகளில் திறம்பட செயல்பட்ட காவல் அதிகாரிகளையும், காவலர்களையும் ஊக்குவிக்கும் விதமாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜியாவுல் ஹக் IPS. அவர்கள் 10.12. 2019 ஆம் தேதி காலை, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி