கோவை: கோவை மாவட்டத்தில் வீடு புகுந்து திருடுதல், மற்றும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல் ஆகிய வழக்குகளில் துப்புதுலக்க தனிபடை அமைக்கபட்டது.
இதில்துரிதமாகவும், திறம்படவும், செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்களுக்கும், காவல் ஆளிநர்கள் குடியிருப்பை தூய்மையாகவும், அழகான தோட்டம் அமைத்தும் பராமரித்து வந்த ஆளிநர்களை பாராட்டியும் மொத்தம் 34 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்குஇன்று பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கப்பட்டது. இதை கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி , போலீஸ் சூப்பிரெண்டு திரு.நாகரத்தினம் ஆகியோர் வழங்கினார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்