திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சட்டம் ஒழுங்கு சம்பந்தமான கூட்டம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மகாலில் நடந்தது. இதில் எஸ்.பி.ரவளி பிரியா பேசியதாவது: சமூக விரோதிகள் நாம் எதிரிகள் .அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
குற்ற நிகழ்வுகளை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு அவசியம் .இதனால் குடியிருப்பு பகுதிகளில் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்துவதற்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விரிவாக்க பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு அவசியம். நகை பறிப்பு, இரு சக்கர வாகனம் திருட்டு, வீடு புகுந்து திருட்டு ஆகிய சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.
மேலும் பொதுமக்களிடம் அன்பாகவும் நண்பர்களைப் போலவும் பழக வேண்டும், என்றார். மேலும் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து குற்ற சம்பவங்களை தடுத்தல் மற்றும் கண்டுபிடித்த 31 காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி ரவளிபிரியா பாராட்டு சான்றிதழும், வெகுமதியும் வழங்கினார்.
இதில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள்,இன்ஸ்பெக்டர்கள்,சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.